யார் இந்த பெரியார்?
யார் சொல்லியும் கேட்காமல் சென்னைக்குப் போய்த்தான் தீருவேன் என்றிருந்த ராமசாமியார், தன் மனைவி நாகம்மை அதற்கு மறுப்புத் தெரிவித்ததும், அவர் கருத்தை ஏற்றுக்கொண்டு ஈரோட்டிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
ஆனாலும், பொது வாழ்வில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டே இருந்தார். எங்கு எப்போது பொதுக் கூட்டம் நடந்தாலும், இவர் தன் அஜ, கஜ, துர கத, பதாதிகளுடன் அங்கே ஆஜராகிவிடுவார். இதனால், ராஜாஜிக்கு ராமசாமியாரின் மீது தனி மரியாதை. இத்தனை மனிதர்களின் கவனத்தையும் மரியாதையையும் பிரயர்த்தனப்படாமலேயே சம்பாதிக்கும் இயல்பு ராமுவுக்கு இருந்ததால் போகிற இடமெல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பும் கவனிப்பும் இருந்தது. இது ஒரு போதை மாதிரி அவரை வசீகரிக்க, தன் வேலைகளைவிட இது போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில் பெரிய ஆர்வம் ஏற்பட ஆரம்பித்தது.
இப்படி ராமு ஒரு பக்கம் அரசியலை ஆராய்ந்துகொண்டிருந்த போது, இந்தியா முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார் அன்னி பெசண்ட் அம்மையார். இவர், அயர்லாந்தில் இருந்து இந்தியா வந்தவர். ஆரம்பத்தில் கிழக்குத் திசை நாடுகளின் பாரம்பரியம், மதம், கலாச்சாரம் ஆகியவற்றைப்பற்றி ஆராயவே உருவாக்கப்பட்ட தியாசொபிகல் சொசைட்டி என்கிற அமைப்பில் ஒரு அங்கத்தினராக மட்டுமே இருந்திருந்தார் அன்னி. 1875இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹெலெனா ப்ளவாட்ஸ்கி என்கிற பெண்மணி ஹென்றி ஆல்காட் என்பவருடன் சேர்ந்து இந்தத் தியாசொபிகல் சொசைட்டியை உருவாக்கி இருந்தார். இந்தச் சங்கம் பவுத்த மதத்தைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது.
ஆனால், அன்னி பெசண்ட் 1908ஆம் ஆண்டு இந்த தியாசொபிகல் சொசைட்டியின் தலைவரான பிறகோ, பவுத்த ஆராய்ச்சியை விட்டுவிட்டு ஹிந்து சமயத்தைக் குறித்த ஆய்வில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். ஆரியர்கள் தூய்மையான இனத்தவர்கள் என்றும், அவ்வழி வந்த பிராமணர்கள் தெளிந்த ஞானம் பெற்றவர்கள் என்றெல்லாம் அபிப்ராயங்களை வைத்திருந்த அன்னி பெசண்ட், இதனால் பிராமணர்களைப் பெரிதும் ஆதரிக்க, இது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்களைப் பெரிதும் எரிச்சலுற வைத்தது.
இதே அன்னி பெசண்ட் அம்மையார் ஹோம் ரூல் இயக்கத்தைத் தொடங்கி, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு உட்பட்டுக்கொண்டே இந்தியர்கள் சுய ஆட்சி பெறுவதற்குண்டான போராட்டத்தைத் தொடங்கினார். இந்த யுக்தி பால கங்காதர திலகர், முகமது அலி ஜின்னா மாதிரியான தலைவர்களுக்குப் பிடித்திருந்தது, அதனால், அவர்கள் பெசண்ட் அம்மையாரை ஆதரித்தார்கள். ஆனால், மோகன் தாஸ் காந்திக்கு இந்த யுக்தி பிடிக்கவில்லை. நகர்ப்புரங்களில் வாழும் மேதவிலாசிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அவர்களது தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும்படி ஒரு சுய ஆட்சி ஏற்படுவதற்குப் பதிலாக, பூரண சுதந்திரம் பெறுவதையே மோகன் தாஸ் நல்ல யுக்தியெனக்கருத, இந்திய தேசிய காங்கிரஸில் பிரிவினை ஏற்பட்டது. சிலர், அன்னி பெசண்ட் அம்மையின் ஹோம் ரூலை ஆதரித்தார்கள், சிலர் மோகன் தாஸின் கிராமம் சார்ந்த பூரண சுயராஜ்யத்தை ஆதரித்தார்கள்.
இப்படி உட்பூசல்கள் ஏற்பட்டிருந்த இந்தக் காலத்தில்தான் ராஜாஜிக்கு ஒரு புதிய அய்டியா தோன்றியது. எங்கோ சென்னையில் இருந்துகொண்டு அரசியல் ஆதிக்கம் செலுத்தும், அன்னி பெசண்ட்டை ஒழிப்பது, இந்தியர்களுக்கு என்று ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள அவர் முடிவு செய்தார். அதனால், சிறீரங்கத்தில் இதற்காக ஒரு ரகசியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இதில், சேலம் விஜயராகவாச்சாரியார், ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன், ஆதி நாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோசப், டாக்டர் நாயுடு, இவர்களுடன் ஈ. வெ. ராமசாமி ஆகியோரும் முக்கியப் பிரமுகர்களாகக் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், பெசண்ட் அம்மையின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும். அவர் எங்கள் பிரதிநிதியே அல்ல. அந்த அம்மாளின் அபிப்ராயம் இந்த நாட்டு மக்களின் அபிப்ராயமல்ல என்று உலகறியப் பிரகடனப்படுத்த முடிவானது. இதற்கு ஒரு கமிட்டி அமைத்து, பணம் வசூலித்து, ஊர் ஊராகப் போய்ப் பிரச்சாரம் செய்வது என்று முடிவானது.
ஆனால், இதற்கும் ஒரு எதிர்ப்பு இருந்தது. சென்னையில் கஸ்தூரி ரங்க அய்யங்கார் என்கிற வழக்குரைஞர் இருந்தார். அவர் சுப்ரமணிய அய்யர் அதுவரை நடத்திய தி ஹிந்து இதழை விலைக்கு வாங்கி நடத்தி வந்த பெருத்த பணக்காரர். அவருக்கு ராஜாஜி இப்படிப் பிரபலமாகிக்கொண்டே வருவது பிடிக்கவில்லை. அதனால், அவர் பல முட்டுக்கட்டைகளைப் போட, இதை அறிந்த ராஜாஜி, மெட்ராஸ் மாகாணத்துக்கு என்றே ஒரு பிரத்தியேகத் தனிக் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்தார்.
சென்னையில் சவுந்தர்ய மஹால் என்கிற இடத்தில் இதற்காக ஒரு கூட்டம் கூடியது. வெறும் பிராமணர்களை வைத்துக் கூட்டம் நடத்தினால் பொது மக்களிடம் செல்வாக்கைப் பெற முடியாது என்பதால் பிரபல பிரமணரல்லாதவரான, திரு வி.கல்யாணசுந்தரம், கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை, டாக்டர் நாயுடு, ஈ.வெ. ராமசாமி, தண்டபாணி பிள்ளை ஆகிய தமிழர்களும், பல தெலுங்கு, கன்னட, மலையாளப் பிரதிநிதிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படிக் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள், மெட்ராஸ் ரேஷனலிஸ்ட் அசோசியேஷன் என்கிற ஒரு கட்சியை ஆரம்பித்தார்கள். இந்தக் கூட்டத்தில் கஸ்தூரிரங்க அய்யங்காரும் கலந்துகொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமாய் ராமசாமியார் முன் வைத்தது, நூற்றுக்கு முப்பது இடங்களுக்குக் குறைவில்லாமல் பார்பனரல்லாதவருக்கு உத்தியோகம், பிரதிநிதித்துவம் எல்லாம் கொடுப்பது என்கிற தீர்மானம்.
சிறீரங்கத்தில் இதற்காக ஒரு ரகசியக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்
இதில், சேலம் விஜயராகவாச்சாரியார், ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்,ஆதி நாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோசப், டாக்டர் நாயுடு, இவர்களுடன் ஈ.வெ.ராமசாமி ஆகியோரும் முக்கியப் பிரமுகர்களாகக் கலநதுகொண்டனர்.
இதில், சேலம் விஜயராகவாச்சாரியார், ராஜாஜி, டாக்டர் டி.எஸ்.எஸ்.ராஜன்,ஆதி நாராயண செட்டியார், ஜார்ஜ் ஜோசப், டாக்டர் நாயுடு, இவர்களுடன் ஈ.வெ.ராமசாமி ஆகியோரும் முக்கியப் பிரமுகர்களாகக் கலநதுகொண்டனர்.
இந்த மாநாட்டுக்கு, குழுத் தலைவர்களை நியமிக்கும் போதே பிரச்சினை கிளம்பியது. இந்த மாநாட்டுக்கு விஜயராகவாச்சாரியாரைத் தலைவராக மக்கள் பிரேரேபித்தார்கள். உடனே, கஸ்தூரிரங்க அய்யங்காரை உப தலைவராகப் பிரேரேபித்தார் ராஜாஜி. பிராமணர்கள் மட்டுமே பதவிகளை வகிக்க முயல்வது பிடிக்காமல், ஈ.வெ.ரா.சும்மா இல்லாமல் வ.உ. சிதம்பரம்பிள்ளையை இன்னொரு உபதலைவராகப் பிரேரேபித்தார். இரண்டு உபதலைவர்கள் இருந்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். உடனே பொதுமக்களும் நிர்வாகிகளும் இதை ஆதரிக்க, கஸ்தூரிரங்க அய்யங்காருக்கு இது பிடிக்காமல் போனது. ஒரே உபதலைவர் போதுமே என்று அவர் ஆட்சேபிக்க, பார்த்தாயா இந்தப் பார்ப்பனருக்கு இருக்கும் பதவி வெறியை, பார்ப்பனரல்லாதவருக்குப் பதவி கொடுத்து மரியாதை செய்ய மனசு வருகிறதா பார்! என்று கூட்டத்தில் இருந்தோரெல்லாம் தங்கள் அதிருப்தியைத் தெரிவிக்க, ராஜாஜி எப்படியாவது பிரச்சினையைச் சுமூகமாய்த் தீர்த்துவைக்க முயன்றார். ஆனாலும், கூட்டத்தில் ஒரு பலமான பிளவு ஏற்பட்டுவிட்டிருந்தது. அதனால், மாலை வரை முடிவை ஒத்தி வைக்கலாம் என்று அறிவித்துவிட்டார் ராஜாஜி.
இடைவேளையில் ராஜாஜி, ராமசாமியார், வரதராஜூலு நாயுடு, திரு. வி. க, எல்லோரும் ஒரே காரில் பயணித்த போது, இதற்கு ஜஸ்டிஸ் கட்சியேமேல் மாதிரி இருக்கே என்று ராஜாஜி ஒரே உப தலைவரை நியமித்ததற்குச் சமாதானம் சொல்ல, ராமுவோ, தலைவர் விஜயராகவாச்சாரியார், ஒரே உபதலைவர் கஸ்தூரிரங்க அய்யங்கார், ஒரே தலைமைக் காரியதரிசி நீங்கள், இப்படி இருந்தால் ஒரு தமிழனுக்குக்கூட இடமில்லையா? இடம் தர இவர்களுக்கு இஷ்டமில்லையா? என்று மக்கள் நினைத்துவிடுவார்களே என்று சொல்லிப் பார்த்தார். இதற்கு ராஜாஜி எதுவும் சொல்லவில்லை. இதற்கிடையில் மாலைக்குள் ஒரே உபதலைவர் போதும் என்கிற முடிவுக்கு வரும்படி, கஸ்தூரிரங்கர் ஓட்டுச் சேகரிக்கும் சேதி ராமசாமியின் காதுகளை எட்டியது.
எல்லாப் பதவிகளையும் பிராமணர்களே வைத்துக்கொண்டு, மற்றப் பார்ப்பனரல்லாதவரை வெறும் கைப்பாவையாய் அசைத்து வேடிக்கை பார்க்கும் இந்தப் போக்கு ராமசாமியாருக்குக் கடும் எரிச்சலைக் கிளப்பியது. உடனே, ஒரு அய்ம்பது ரூபாயை எடுத்து, செய்தி சொன்ன தண்டபாணி பிள்ளையிடம் கொடுத்தார் ராமு. நூறு டெலிகேட் டிக்கெட் வாங்கி, தொழிலாள நண்பர்களை மாலைக் கூட்டத்திற்கு அழைத்து வாருங்கள் என்றார்.
மாலைக் கூட்டம் சவுந்தர்ய மஹாலில் மீண்டும் கூடியது. தொழிலாளர்கள் நூறு பேர் வந்து உட்கார்திருந்தார்கள். ராமசாமியாரின் யுக்தி நிச்சயம் ஜெயித்துவிடும் என்று அய்யங்கார் கோஷ்டிக்குத் தெரிந்து விட்டது. உடனே ராஜாஜி தன் வழக்கமான பாணியில் ஒரு ராஜ தந்திரம் செய்ய முயன்றார். ஒன்றுக்கு நான்கு உபதலைவர்கள்: வ. உ. சி. யோடு சேர்ந்து சத்தியமூர்த்தி அய்யர் என்பவரும் அதில் இடம் பெறுவார் என்று ராஜாஜி பிரேரேபிக்க, ஈ. வெ. ரா. இதற்கு உடனே ஒப்புதல் தெரிவித்தார். ஆனால், திரு. வி. க., தண்டபாணி பிள்ளை ஆகியோர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளாததால் நான்கு உபதலைவர்கள் என்கிற இந்தத் தீர்மானம் தோற்றுப்போனது. அதனால் ஈ. வெ. ரா. ஏற்கெனவே சிபாரிசு செய்திருந்தபடி, இரண்டு உபதலைவர்கள்: கஸ்தூரி ரங்கரும், வ. உ. சி. யும் என்று முடிவானது. சத்தியமூர்த்தி அய்யருக்கு உறுப்பினர் பதவிகூடக் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால், டாக்டர் நாயுடு, டி. எஸ். எஸ். ராஜன், திரு. வி. க. ஆகியோரும் உறுப்பினராயினர். அதனால் கடுப்புற்றிருந்தார் சத்தியமூர்த்தி.
ராஜாஜி, டாக்டர் நாயுடு, ஈ. வெ. ரா. ஆகிய மூவரும் நெருக்கமான கோஷ்டியானார்கள். இதனால், சென்னை மாகாணத்தில் தலைவர்களாய் இருந்து வந்த ரங்கசாமி அய்யங்கார் கோஷ்டிக்கும், பெசண்ட் அம்மையாரின் கோஷ்டிக்கும், ராஜாஜியின் கோஷ்டி மீது பொறாமை ஏற்பட ஆரம்பித்தது. இதனால், கஸ்தூரிரங்க அய்யங்கார் நேரடியாகவும், மறைமுகமாகவும் தன் பத்திரிகையில் அவர்களைத் திட்டி எழுத ஆரம்பித்தார். சத்தியமூர்த்தி அய்யரோ பகிரங்கமாகவே ராஜாஜி கோஷ்டிக்கு எதிராகப் பொதுப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். ஆனால், ராஜாஜியை நாயுடுவும், ஈ. வெ. ராவும் பலமாக ஆதரித்ததால் ராஜாஜியின் செல்வாக்கு மக்களிடம் பெருக ஆரம்பித்தது. அநேகப் பார்ப்பனர்கள் அவர்களை ஆதரிக்க முன்வந்தார்கள்.
(தொடருவார்....)
யார் இந்த பெரியார்?கதரும் காந்தியும்
மனநல மருத்துவர் ஷாலினி
ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தின் சுவடுகளை நேரில் பார்த்த அக்கணத்தில் இருந்து ராமசாமிக்கு மனசே ஆறவில்லை. சும்மாவே அநீதிகளைக் கண்டால் கொளுந்துவிட்டு எரியும் தன்மை கொண்ட இவர் மனசு, இப்படி ஆயிரக்கணக்கில் பொது மக்கள் இரக்கமின்றிக் கொல்லப்பட்ட காட்சியைக் கண்டால் கேட்கவேண்டுமா?
அப்போது மோகன் தாஸ் காந்தி காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட, அவர் தனது நூதனமான சத்தியாகிரக முறையில் பிரிட்டிஷை எதிர்த்துப் போராடுவதாக அறிவித்திருந்தார். ரவுலத் சட்டம் அமலுக்கு வந்த பிறகு, காரணமே இன்றி, யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் கைது செய்து, விசாரணையே இன்றி, தண்டனை கொடுக்கும் அதிகாரம் பிரிட்டிஷ் சர்க்காருக்கு வந்துவிட, ஆர்ப்பாட்டங்களோ, போராட்டங்களோ, செய்ய முடியாத நிலை. எதுவுமே செய்யாமல் எப்படிப் போராடுவதாம்? எதுவுமே செய்யாமல் இருப்பதே ஒரு விதப் போராட்டம் தானே என்று ஒத்துழையாமை இயக்கத்தை அறிமுகப்படுத்தினார் காந்தி.
இதைத் தவிர போராட வேறு வழி இல்லா நிலை. இந்த விதமான போராட்டத்தின் நூதனம், பிரிட்டிஷ் சூழ்ச்சியை ஒரு சின்ன யுக்தியால் வீழ்த்தும் முறை இது என்கிற நம்பிக்கை. கூடவே இளைஞர்களின் இருப்புக்கொள்ளா ஆத்திரம் கேட்கவேண்டுமா? இவை எல்லாமுமாய் சேர்ந்து மக்களை ஆட்படுத்த, காந்தியக் கொள்கைகள் காட்டுத்தீ போல இந்தியா எங்கும் பரவின. காந்தியைப்பற்றியும் அவர் கொள்கைகள் பற்றியும் முழுமையாகத் தெரிந்து கொள்ளப் போதுமான அவகாசம் இல்லை. அவசர காலத்தில் பிரிட்டிஷை எதிர்த்துப் பேசக் கூடிய ஒரு தலைவன் கிடைத்தால் போதும் என்கிற இக்கட்டு. அதனால், யாருமே காந்தியையோ அவர் கொள்கைகளையோ விமர்சிக்காமல் உடனே அவரைப் பின்பற்ற ஆயத்தமானார்கள்.
தன் நண்பர் சி. ராஜகோபாலச்சாரி, காந்திக்குப் பெரிய விசுவாசி ஆகிப்போனதால், அந்த அலையோடு அடித்துச் செல்லப்பட்டார் ராமுவும். காந்தி, தீண்டாமையை ஒழிக்கலாம், மதுக்கடைகளை மறியல் செய்யலாம், பிரிட்டிஷை அகிம்சை முறையில் எதிர்க்கலாம், அந்நிய ஆடைகளைத் துறந்து, கதர் ஆடைகளைப் பயன்படுத்தலாம், புதியதோர் உலகைப் படைக்கலாம் என்று எல்லாம் கோஷம் எழுப்ப, இவை எல்லாமே ராமசாமிக்கு ரொம்பவே பிடித்துப்போயின. மாற்றுச் சிந்தனையே இல்லாமல், உடனே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காந்தியக் கொள்கைகளைத் தமிழ்நாட்டில் பரப்பத் தயாரானார்.
எதையுமே அரை குறையாகச் செய்யும் பழக்கம்தான் ராமுவுக்குக் கிடையாதே. எடுத்த காரியம் எதுவானாலும் அதற்குத் தன் முழு மனதையும், உடலையும் செலவிடுவது தான் அவர் குணம். அதனால், காங்கிரஸில் சேர்ந்து சமூகப் பணியில் ஈடுபடுவது என்று முடிவான அடுத்த நாளே, தன்னை அதற்குண்டான தகுதிகள் கொண்டவராக மாற்றிக்கொள்ள ஆரம்பித்தார். அதுவரை, பட்டும் பொன்னும், ஆடம்பர செல்வந்தரின் வாழ்க்கை முறையுமாக இருந்தவர், அடுத்த நாளே எல்லா அணிகலன்களையும் கழற்றிவிட்டு, சாதாரண கதர் ஆடைகளுக்கு மாறினார். தான் மட்டும் மாறியதில்லாமல், தன் மனைவி, சகோதரிகள், அவ்வளவு ஏன், தன்னோடு எப்போதுமே பிணங்கிக்கொண்டிருந்த தன் அம்மாவைக்கூட கதர் உடுத்த வைத்தார்.
அதுவரை, சிகரெட், வெற்றிலை, பெண் சகவாசம் என்றிருந்த மனிதர், எல்லாவற்றையுமே ஒரே நாளில் ஏரக்கட்டினார். சமூக வாழ்வில் ஈடுபடுபவர் சர்வ ஒழுக்கத்துடன் இருந்தே ஆகவேண்டும் என்பது அவர் தனக்குத்தானே வைத்துக்கொண்ட கொள்கை. இவ்வளவு அகிம்சையும், அன்பும் பேசிய காந்தி, தன் தனிப்பட்ட வாழ்வில் பெரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார் என்று சொல்வதற்கில்லை. தன்னுடைய சாபர்மதி ஆசிரமத்தில் வயதிற்கு வந்த இளம் பெண்களை நிர்வாணமாக்கி, இவரும் அம்மனக்கோலமாய் அவர்களைக் கட்டிப்பிடித்து படுத்துத் தூங்கிய கதைகள் வெளியில் கசியாமல் இல்லை. ஆனால், இந்த உட்கதைகள் எதுவுமே தெரியாத பலர் காந்தியைப் பெரிய மகான் என்றே நம்பினார்கள். இப்படி உள்ளே ஒரு விதம்; அதை நியாயப்படுத்த, நான் ஒரு தாய் ஸ்தானத்தில் இருந்துதான் அப்பெண்களை இப்படி ஆடையில்லாமல் கட்டிப்பிடிக்கிறேன் என்கிற சல்ஜாப்புக் கதைகள், வெளியே வெட்கமே இல்லாமல் தன்னை ஒரு மகாத்மா என்று காட்டிக்கொள்ளும், ஹிப்போகிரிஸி..இப்படி எந்தச் சூதுமே ராமுவிடம் இல்லை.
அவர் மைனராய்ச் சுற்றிய காலத்தில் அடித்த கொட்டம் ஊர் அறிந்ததே. அதே மனிதன் சமூக சேவகரான பிறகோ, அப்பழுக்கற்ற ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தார். யாரும் நிர்ப்பந்திக்காமல், சுயமாகவே இப்படி பல கட்டுப்பாடுகளை அவர் விதித்துக்கொள்ள, இதனாலேயே ஊர் மக்களிடையே அவருக்கு நல்ல பெயர் பெருக ஆரம்பித்தது.
அவருக்கு இப்படி மக்கட் செல்வாக்கு அதிகரிக்க இன்னும் ஒரு காரணம்: அதுவரை மிகப் பெரிய பணக்காரராக இருந்த ராமு, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று, காங்கிரஸ்காரர் ஆன பிறகோ, பெரும் பண நஷ்டம் அடைந்தார். அவர் தன் தொழிலை விட்டுவிட்டு, இப்படி கட்சிப் பணி செய்தது அவர் வருமானத்தைக் குறைத்தது ஒரு பக்கம். தனக்கு வரவேண்டிய 50,000 ரூபாய் பணத்தை, கோர்ட்டுக்குப் போய் சுலபமாக வசூலித்திருக்கலாம். ஆனால், ஒத்துழையாமை காலத்தில் பிரிட்டிஷ் கோர்ட்டுகளைப் புறக்கணிப்பது என்று தீர்மானமாகி இருந்ததால், அப்பணத்தை வசூலிக்க முயற்சியே செய்யாமல் விட்டுவிட்டார் ராமு. அந்தக் காலத்தில் அந்தத் தொகை ரொம்பவே பெரியது என்பதால், அதை அவர் விட்டுக்கொடுத்ததே மிகப் பெரிய செய்தி ஆனது.
அதுமட்டுமல்ல, காந்தி கள்ளுக்கடை மறியல், மதுவை எதிர்த்துப் பிரச்சாரம் என்று ஆரம்பித்த காலத்தில், பனை மரம், ஈச்ச மரம், தென்னை மரம், என்று கள் இறக்கப் பயன்படுத்தப்பட்ட எல்லா மரங்களையும் வெட்டிவிடும்படிக் குரல் கொடுக்க, இந்தியா முழுவதும் பல மரங்கள் இதற்காக வெட்டப்பட்டன. சாலையோரம், யாருக்கும் சொந்தமில்லாமல் அநாமத்தாகக் கிடக்கும் மரங்களை வெட்டினாலாவது பரவாயில்லையே, ராமசாமியார் தன் சொந்தப் பண்ணையில் இருந்த ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டார்!
இந்த அளவிற்கு கொள்கை வீரரா என்று எல்லோரும் ராமுவைப் பாராட்டி வியக்க, ராமசாமியாரும் காந்தியக் கொள்கைகளைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தார். கை ராட்டினத்தையும், துணிமூட்டைகளையும் தூக்கிக்கொண்டு ஊர் ஊராகப் போய், விதேச துணிகளைப் பயன்படுத்தாமல் கதர் ஆடையை அணிய பொது மக்களிடம் பிரச்சாரம் செய்தார். ராமு கொச்சைத் தமிழில் சிரிக்கச் சிரிக்க, தமாஷாகப் பேசி, பொது மக்களின் மனதைக் கவர்ந்து, கருத்துகளைச் சுலபமாக மாற்றி, கதராடை அணியும் எண்ணத்தை எல்லோர் மனதிலும் ஏற்படுத்திவிட, தமிழகத்தில் கதர் விற்பனை அமோகமாக இருந்தது. கதர் ஆடைகளைத் தயாரிக்கும் கதர் வஸ்திராலயங்களையும் ராமசாமியாரே முன்னின்று ஏற்படுத்தியும் வைத்தார்.
இப்படி ராமு மட்டுமின்றி, அவர் மனைவி நாகம்மையும், சகோதரி கண்ணம்மாவும்கூட இந்தச் சமூகப் பணிகளில் ஈடுபட்டார்கள். 1921 ஆம் ஆண்டு, ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலை ஈ. வெ. ரா. தலைமை தாங்கித் தொடக்கி வைத்தார். இதற்கு 144 தடுப்புக் காவல் சட்டம் விதிக்கப்பட, இத்தடையை மீறி ராமு மறியலில் ஈடுபட, தொண்டர்கள் சகிதம் ராமு கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். இப்படி ராமு சிறைக்குப் போன பிறகு, சும்மா இருக்கவில்லை நாகம்மையார். கண்ணம்மாவும் இவரும், மறியலைத் தலைமை தாங்கி நடத்த, பல பெண்களும் போராட்டத்தில் கலந்துகொள்ள ஆரம்பித்தார்கள். இப்படி, பெண்களும் களத்தில் இறங்கிவிட்டதால் திக்குமுக்காடிப் போனார்கள் போலீசார். காரணம், இத்தனை பேரை இனி கைது செய்ய வேண்டுமானால், முதலில் அவ்வளவு இடம் சிறைச்சாலையில் இருக்க வேண்டுமே! இதனால் என்ன செய்வதென்று திணறிய பிரிட்டிஷ் சர்க்கார், அவசரமாக காந்திக்கு அழைப்பு விடுத்தது. மறியல் போராட்டத்தை நிறுத்துங்கள் என்று ஆணை பிறப்பித்தது.
காந்தி வழக்கம் போல சாந்தமாகச் சொன்னார், போராட்டத்தை நிறுத்துவது இனி என் கையில் இல்லை. ஈரோட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் கையில் தான் இருக்கிறது என்று.
ஈரோட்டில் அந்த இரண்டு பெண்களும் போராட்டத்தை நிறுத்தவே இல்லை. இதனால், இந்திய வரலாற்றில் முதல் முறையாக போராட்டத்திற்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடை ரத்து செய்யப்பட்டது.
இப்படியாக மிக முழுமையாகவும் தீவிரமாகவும், காந்தியக் கொள்கைகளுக்கும், தேசியவாதத்துக்கும் போராடிய ஈ. வெ. ரா. இதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டுக்கு மாறி, காந்தியார் ஒழிக என்றே முழங்க ஆரம்பித்தார். ஏன் தெரியுமா?
(தொடரும்....)
யார் இந்த பெரியார்
வைக்கம் போராட்டம்
வைக்கம் போராட்டம்
மனநல மருத்துவர் ஷாலினி
1924 ஆம் ஆண்டு. திருவாங்கூர் சமஸ்தானத்-தைச் சேர்ந்த வைக்கம் என்கிற சிற்றூர் தேசிய கவனத்தைத் திருப்ப ஆரம்பித்தது. காரணம் இது தான். அந்த ஊரில் இருந்த சிவன் கோயிலைச் சுற்றி இருந்த நான்மாட வீதிகளில், கீழ்ஜாதியினர் நடக்கக் கூடாது என்பது அந்த ஊரின் நடைமுறை. கிருத்துவர்களும், இஸ்லாமியரும் அவ்வீதி வழியே நடக்க அனு-மதிக்கப்பட்டார்கள். ஆனால், ஹிந்து மதத்தைச் சேர்ந்த பிராமணர், நாயர் மாதிரியான உயர் ஜாதிக்காரர்களைத் தவிர மற்ற அவணர்கள் அவ்வழியில் புழங்கக்கூடாது என்பது அந்த ஊர் வழக்கம். திருவாங்கூரில் சிறீநாராயண குரு என்கிற ஒரு சமய குரு அப்போது பிரசித்தி பெற்றிருந்தார். அவர் இழவா இனத்தைச் சேர்ந்த மனிதர்களுக்கு எல்லாம் சுயமரியாதை பெற்று, மற்ற ஜாதிமனிதர்-களுக்கு நிகரான அந்தஸ்த்தைப் பெற சமயரீதி-யாகப் போராடிவந்த பெரியவர். இழவர்கள் இந்துக் கோயில்களுக்குள் போய் இறைவழிபாடு செய்யக்கூடாது என்கிற காரணவிதியை மீறி, இவரே தனியாக ஒரு லிங்கத்தை உருவாக்கித் தனிக் கோயில் அமைத்து, தன் இன மக்களை அங்கு வழிபாடு செய்ய அழைத்தார்.
பிராமணர்-கள் இதை எதிர்த்து, கீழ்ஜாதிக்காரனான நீ எப்படி சிவன் கோயில் கட்டலாம்? என்று ஆட்சேபித்த போது, இது உங்கள் பிராமண சிவன் இல்லை, இது எங்கள் இழவா சிவன், இவரை வழிபட எனக்கு உரிமை இருக்கிறது. நீ உன் கோயிலில் உன் சிவனை வழிபட்டுக்-கொள், நான் என் கோயிலில் என் சிவனை வழிபட்டுக் கொள்கிறேன் என்றுவிட, அப்போது முதல் அதிக ஜனத்தொகையில் இருந்த ஈழவா ஜாதி மக்களின் சமய மற்றும் இனத் தலைவர் ஆகிப் போனார் சிறீ நாராயண குரு. சிறீ நாராயண தர்ம பரிபாலன யோகம் என்கிற அமைப்பை உருவாக்கி, ஈழவா மக்களின் முன்-னேற்றத்திற்காக பெரும் முயற்சிகள் எடுத்துக்-கொண்டார் குரு.
அதனால் ஈழவா பெண்கள் மேலாடை அணியும் உரிமை, (அதற்கு முன்பு திருவாங்கூரில் இருந்த கீழ் ஜாதிப் பெண்கள் யாருமே மேலாடை அணியக் கூடாது என்று அரச சட்டம் இருந்தது!) பிள்ளைகள் பள்ளிக்-கூடத்திற்குப் போகும் உரிமை, ஆண்கள் அடிமை முறையிலிருந்து மீண்டு மானமோடு வாழும் உரிமை என்று பல முன்னேற்றங்களைப் பெற, பிராமணர்களுக்கு ஒரு ஆதி சங்கரரைப் போல, பிற இன மலையாளிகளுக்கு சிறீ நாராயண குரு ஒரு மகத்தான முக்கியத் தலைவர் என கருதப்பட்டார். அதனால், அவருக்குத் திருவாங்கூரில் எக்கச்சக்க மதிப்பும், மரியாதையும் இருந்தது. இதே காரணத்தினால் பிராமணர்களிடையே அவருக்குப் பலத்த எதிர்ப்பு இருந்தது.
இப்பேற்பட்ட பெருமைகள் வாய்ந்த இந்த சிறீ நாராயண குரு, தன் சீடருடன் வைக்கத்தில் இருந்த சிவன் கோயிலுக்குப் போக முயற்சிக்க, கீழ் ஜாதிக்காரன் இந்த வழி வரலாமா? என்று அவரை அவமானப்படுத்தி, துரத்தி அனுப்பிவிட்டான் ஒரு மேல்ஜாதிக்-காரன். இதனால் கொதிப்படைந்த ஈழவா மக்கள் இந்த அநீதியை இனி சும்மா விட முடியாது என்று முடிவு செய்தார்கள். கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் புழங்கு-வது மட்டுமல்ல, கோயிலுக்குள் நுழையவும் நமக்கு உரிமை வேண்டும், அதற்காகப் போராடியே தீரவேண்டும் என்கிற வேகம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
குருவின் ஆஸ்தான சிஷ்யரான டி.கே. மாதவன், அப்போது திருவாங்-கூர் அரசாங்கத்தின் சட்டசபை உறுப்-பினராக இருந்தார். அதனால், காங்கிரஸ் கூட்டங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும், மோகன் தாஸ் காந்தியை நேரில் சந்தித்து தங்கள் இன மக்களுக்கு ஏற்படும் தீண்டாமை அவமானங்கள் பற்றியும் பேச அவருக்கு வாய்ப்புக் கிடைத்தது. வைக்கத்தில் ஒரு சத்யாகிரகப் போராட்டம் நடத்தலாம் என்றும் அதற்கு காங்கிரஸ் கட்சி தன் முழு ஆதரவை அளிக்கும் என்றும் காந்தி வாக்களித்தார். இதற்காகவே ஒரு பிரத்தியேக குழு நியமிக்கப்-பட்டது. சத்யாகிரக முறைப்படி போராடு-வது என்று முடிவானது.
கோயிலைச் சுற்றி இருந்த, ஈழவர்களும், மற்ற கீழ்ஜாதியினரும் இவ்வழி நடமாடக்கூடாது என்கிற அறிவிப்புப் பலகையை அகற்றுவதற்காக வைக்கம் எங்கும் போராட்ட ஊர்வலங்களும், சொற்பொழிவுகளும் ஆரம்பமா-யின. இது பிராமணர்களிடையே பெரிய எதிர்ப்பை ஏற்படுத்த, வைக்கம் இந்திய அளவில் எல்லோ-ராலும், பேசவும், கவனிக்கவும்பட்ட ஸ்தலமானது. பர்மா, மலேசியா, சிங்கப்பூரில் இருந்தெல்லாம், போராட்டத்திற்கான நன்கொடை வந்து குவிந்தது. இந்தியாவின் பல கோடிகளில் இருந்து இதற்காக தன்னார்வத் தொண்டாற்ற பல பேர் வந்து வைக்கத்தில் குவிய, இவர்களுக்காக பிரத்தியேக ஆசிரமம் ஒன்று நிறுவப்பட்டது.
பஞ்சாபில் இருந்து அக்காலி சிங்குகள் வைக்கம் போராட்டக்-காரர்களுக்கு இலவசமாய் உணவு சமைத்துத் தந்து ஊக்குவிக்க, கூட்டம் கூட்டமாகக் கிளம்பி வந்து பெரிய சமையல் அறைகளை அமைத்தார்கள். எல்லா செய்தித்தாள்களும் இதுபற்றி தலையங்-கங்களை எழுதித் தள்ளினார்கள். பல இஸ்லாமியர்-களும், ஆங்கிலேயர்களும், ஏன் பல பிராமணர்-களுமே, இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, தங்கள் பங்கிற்குத் தொண்டாற்ற ஆயத்தமாய் இருந்தார்கள். வினோபா பாவே, ஸ்வாமி ஸ்ரத்தானந்தா, மாதிரியான முக்கியப் பிரமுகர்கள் நேரடியாக வைக்கத்திற்கு வந்து, தொண்டர்களை ஊக்குவித்தார்கள். இருந்தாலும், காந்தி, வெளியாட்கள் யாருமே இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்று அறிவித்துவிட்டார்.
தீண்டாமை என்பது ஹிந்துக்-களின் பாவம், அதற்காக அவர்கள் மட்டுமே போராட வேண்டும், ஒடுக்கப்பட்ட தங்கள் சகோதர சகோதரிகளுக்கு அவர்கள் பட்ட கடனை அவர்களே ஆற்றி ஆக வேண்டும். ஒரு சுத்தமான ஹிந்துவின் அமைதியான, அன்பான வேதனை, கோடி ஹிந்துக்களின் மனதை உருக்கும், ஆனால், இந்து அல்லாதவர்களின் ஈடுபாடு, மற்ற ஹிந்துக்களைப் பாதிக்காது. குற்ற உணர்வை ஏற்படுத்தாது. தன்னைத் தானே வருத்திக்-கொண்டு பிறரின் குற்ற உணர்வைத் தூண்டுவது தவிர இதற்கு வேறு வழி இல்லை என்பது மாதிரி காந்தி சொல்லிவிட, அக்காலி-கள் மீண்டும் பஞ்சாபுக்கே திரும்பினார்கள்.
மலையாளத் தலைவர்களை மட்டுமே வைத்து வைக்கம் சத்தியாகிரகம் துவக்கப்பட்டது. சத்தியா-கிரகிகளுக்குச் சொல்லப்பட்ட வழிமுறை இது தான்: முதலில் இரண்டு கீழ்ஜாதியினர் கோயில் வழி போக முயலவேண்டும், அப்போது காவலன் அவர்களைத் தடுத்து நிறுத்துவான், நீ என்ன ஜாதி? என்று கேட்பான். இழவன், புலையன் என்றால், நீ கீழ் ஜாதி, போக அனுமதி இல்லை என்று நிறுத்தி விடுவான். அப்போது ஒரு நாயர் ஆசாமி போய் நின்று, நான் நாயர், என்னைப் போக விடு, என்று சொல்ல வேண்டும். அனுமதி தரப்படும்.
உடனே, இந்த இழவனும் இந்தப் புலையனும் என் நண்பர்கள், அவர்களையும் என்னுடன் செல்ல அனுமதித்-தால்தான் நான் போவேன் என்று சத்யாகிரக முறைப்படி அடம் பிடித்துக்கொண்டு அங்கேயே தர்ணா செய்ய வேண்டும். எந்தச் சந்தர்ப்-பத்திலும் வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது. எவ்வளவு அடி உதை கிடைத்தாலும் எதிர்த்து கோபித்துச் செயல்படக்கூடாது. ஏன் என்றால் இது தான் காந்தி சொன்ன சத்தியாகிரகம், என்று எல்லோருக்கும் அறிவுறுத்தப்பட்டது. இதன்படியே மார்ச் பத்தாம் தேதி 1924 அன்று போராட்டமும் ஆரம்பமானது.
காந்தி வயதானவர்; தேசத்தலைவர் என்கிற பெரும் அந்தஸ்தில் இருந்தவர்; பாதுகாப்பான வாழ்க்கை வாழ்பவர்; அவருக்கு ஆள் பலம் அதிகம்.- அவர் சத்யாகிரகம் செய்தால், தேசமே பரிதாபப்பட்டு, உடனே அவருக்கு ஆதரவு தெரிவிக்கும். ஆனால், ஒரு கடைக்கோடி மனிதன், சத்யாகிரகம் செய்கிறேன் என்றால் அவனை அடித்து நொறுக்கி, துவம்சம் செய்து-விடுமே. அப்படித்தான் ஆனது வைக்கத்திலும். எல்லா சத்யாகிரகிகளும் அடித்துத் துரத்தப்-பட்டார்கள்.
சத்தியாகிரகம் நடத்தக்கூடிய தலைவர்-கள், ஜார்ஜ் ஜோசஃப், குரூர் நீலகண்ட நம்பூதிரி, போன்ற எல்லோருமே கைது செய்யப்-பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். வழி நடத்த தலைவர்களே இல்லாததால் சத்யாகிரகம் துவண்டு சுருண்டு போகும் நிலையில் இருந்தது. காந்தியோ வெளியாட்கள் தலையிடக் கூடாது என்று கறாராகச் சொல்லிவிட்டதால், அண்டை மாநிலமான மதராஸ் பிரசிடென்சியிலிருந்தும் எந்தத் தலைவரும் போராட்டத்திற்கு வந்திருக்க-வில்லை. வந்தால் மட்டும் என்ன, அவர்-களையும் அடித்து, சிறையில் இட்டிருப்பார்கள். வைக்கம் போராட்டம் கிட்டத்தட்ட ஒடுக்கபட்ட, தோல்வியில் முடியும் தருவாயில் இருந்தது.
ராமசாமி அப்போதுதான் குளித்தலை அரசியல் மாநாட்டை முடித்துக்கொண்டு மதுரை ஜில்லாவில் சுற்றுப்பயணம் செய்து-கொண்டிருந்தார். வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டு, உடல் நிலை சரியில்லாமல் போகவே ஈரோட்டிற்கு வந்து படுக்கையில் விழுந்தார். இந்தச் சமயம், ராமசாமியாருக்கு ஒரு ரகசியக் கடிதம் வந்தது.
திருவாங்கூர் சிறைச்சாலையில் இருந்து ஒரு தூதுவன் வந்து கொடுத்த அந்தக் கடிதத்தை எழுதியவர் ஜார்ஜ் ஜோசஃபும், நீலகண்ட நம்பூதிரியும். பெரிய காரியத்தைத் துவக்கி-விட்டோம், அடக்குமுறை பலமாக இருக்கிறது. இவ்வளவு சீக்கிரத்தில் நாங்கள் எல்லாம் கைது செய்யப்படுவோமென்று எதிர்ப்-பார்க்கவில்லை. தாங்கள் உடனே வந்து சத்தியாகிரகத்தை ஏற்று நடத்தினால்தான் கேரளத்தினுடைய மானமும், எங்களுடைய மானமும் மிஞ்சும். உடனே வரவும் என்று அவசரமாக எழுதி இருந்தார்கள்.
ராமசாமியாருக்கோ உடல் நலம் சரியில்லை. வெளியே அனுப்பாமல் பத்திரப்படுத்தி வைத்தியம் செய்வித்துக்கொண்டிருந்தார் அவர் மனைவி நாகம்மையார். கடிதத்தைப் பார்த்த உடன், எனக்கு உடம்பு சரியாயிடுச்சு என்று சொல்லி விட்டு, பெட்டி படுக்கையுடன் அன்றிரவே வைக்கத்திற்குப் புறப்பட்டார் ராமு.
( தொடருவார் .)
No comments:
Post a Comment